மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் எதிர்வரும் இரண்டு வாரங்களுள் உரிய தீர்வு முன்வைக்கப்படாவிட்டால், மக்களுடன் இணைந்து பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் அரசுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களது பெற்றார் சிலர் நேற்று(18) அவரைச் சந்தித்திருந்த போது, அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் உடனடியாக தீர்வு வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருப்பதாகவும் இதன் போது அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(rizmira)