தொற்றா நோயை மூன்றில் ஒரு பகுதியை கட்டுப்படுத்த நடவடிக்கை…

இலங்கையில் 2020ஆம் ஆண்டளவில் தொற்றா நோயை மூன்றில் ஒரு பகுதியை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த 15 ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை உலக சுகாதார ஸ்தாபனம் ஜேர்மன் பேர்லினில் நடத்திய மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புகையிலை மூலமாக நாட்டிற்கு கிடைக்கும் வருமானத்தை கருத்திற்கொள்ளாமல் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டார் என்றும் அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

தொற்றா நோய்களின் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரில் 60 சதவீதமானோர் உயிரிழக்கின்றனர் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.