அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் விசேட செயற்குழுக் கூட்டமொன்று அவசரமாக இன்று(19) முற்பகலில் கொழும்பில் இடம்பெறவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
விசேட ஒதுக்கீட்டின் கீழ் சைட்டம் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு 9 கோடி ரூபா நிதியை வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது.
குறித்த இந்த விடயம் தொடர்பாகவும், அது தவிர சைட்டம் விவகாரத்தில் எடுக்கவுள்ள அதிரடி தீர்மானங்கள் குறித்தும் இன்றைய தினம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆராய இருக்கின்றது.
(rizmira)