இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சில மாதங்களுக்கு முன் 99 SONGS என்னும் படத்தை தானே தயாரிப்பதாக கூறியிருந்தார். தற்போது அது குறித்த பல விடயங்களை அவர் பகிர்ந்துள்ளார்.
இப்படத்திற்காக சரியான ஜோடி வேண்டும் என்பதற்காக 1000 ஆடிஷன்களை நடத்தினாராம். தற்போது புத்துணர்ச்சியாகவும், திறமையாகவும் இருக்கிறவர்கள் தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறோம்.
அவர்கள் ஹாலிவுட்டிலும் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். விரைவில் இப்படத்தின் மியூசிக் ஆல்பத்தை வெளியிடுவோம். இப்படத்தின் படப்பிடிப்பை இவ்வருடம் ஆரம்பித்து முடித்துவிட்டோம்.
இந்தியாவிலும், உக்ரைனிலும் ஷூட்டிங் எடுத்தோம். இப்படத்தில் 99 பாடல்களா என பலரும் கேட்கிறார்கள். இல்லை. இதில் 10 அல்லது 12 பாடல்கள் இருக்கும் என அவர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.