வயதாவதால் முகத்தில் ஏற்படும் முதல் அறிகுறி தான் உதட்டுச் சுருக்கம். இங்கே சில எளிய முறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த முறைகள் அனைத்தும் நாம் அன்றாடம் நம் வீடுகளில் உபயோகிக்கும் பொருட்களை வைத்தே செய்யலாம்.
ஆலிவ் ஆயில்:
ஆலிவ் ஆயில் சுருக்கங்களை நீக்குவதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. இது உங்கள் உதட்டில் ஈரப்பதத்தைத் தக்க வைத்து சுருக்கங்கள் இல்லாமல் சரி செய்ய உதவுகிறது
இலவங்கப்பட்டைப் பொடி:
இலவங்கப்பட்டைப் பொடியை சிறிது நீரில் கலந்து அந்தக் கலவையை உதட்டின் மீது தடவ வேண்டும். 10 நிமிடம் அதனை வைத்திருந்த பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவி விட வேண்டும். இதுவும் உதட்டு சுருக்கத்தைப் போக்க பயன்படுத்தும் முறையாகும்.
கற்றாழை ஜெல்:
தினமும் 2 முறை இந்த கற்றாழை ஜெல்லை உதட்டில் சுருக்கங்கள் உள்ள இடத்திலும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் தேய்த்து வர வேண்டும். இது உதட்டு சுருக்கத்தை விரட்டியடிப்பதில் சிறந்து விளங்குகிறது
பப்பாளி:
இது உதட்டில் உள்ள இறந்த சரும செல்களை நீக்கி உதட்டின் அழகை மேம்படுத்துகிறது. சிறிது பப்பாளி பழத்தை எடுத்து மசித்து அதனை உதட்டின் மீது தேய்த்து 2 முதல் 3 நிமிடம் கழித்து கழுவி விட வேண்டும்.
தேங்காய் எண்ணெய்:
உதட்டில் தேங்காய் எண்ணெயை தேய்த்து மசாஜ் செய்து 15 நிமிடம் கழித்து அதனை சுத்தம் செய்து விடுங்கள். இதனை தொடர்ந்து செய்வதால் உதட்டில் உள்ள சுருக்கம் மறைவதுடன் அவை அடிக்கடி வராமலும் தடுத்துவிடும்.