நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை தொடர்பில் ஒப்பந்தங்கள் இல்லை..

நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையினை அரசுடைமையாக்கிய போதிலும் அது குறித்த எந்தவொரு சட்ட ரீதியான ஒப்பந்தங்களும் இதுவரை கைச்சாத்திடப்படவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசுடைமையாக்கிய நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை குறித்த எந்தவொரு தகவல்களும் தமக்கு கிடைக்கப் பெறவில்லை என சுகாதார அமைச்சு மற்றும் உயர் கல்வியமைச்சு ஆகியவை ஏற்றுக் கொள்வதாகவும், சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி குறித்து நாட்டில் நிலவும் சர்ச்சை நிலையினை கட்டுப்படுத்தவே இவ்வாறு தெரிவித்துள்ளதாகவும் அதற்கு குறித்த அமைச்சுக்கள் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் அரச வைத்திய அதிகாரிகளது சங்கத்தின் செயலாளர் ஹரித அழுத்கே தெரிவித்துள்ளார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கமானது நேற்று(19) கொழும்பில் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

 

(rizmira)