இரத்தினபுரி மாவட்டத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..

தற்பொழுது நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட மற்றும் எஹலியகொட பிரேதச செயலக பிரிவுகளில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

கடந்த 24 மணித்தியாலங்கில் 100mm மழைவீழ்ச்சியை அதிகரித்துள்ளதால் மழை தொடருமாயின் மண்சரிவு , சாய்வு இடிந்து விழுகை , பாறை விழுதல், நிலவெட்டுச் சாய்வு , தரை உள்ளிறக்கம் போன்றவை ஏற்படக்கூடும்.

இதன் காரணமாக குறித்த இந்த பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதிப் கொடிப்புலி தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டில் தற்பொழுது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை மேலும் அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

(rizmira)