இரண்டு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(24) கட்டார் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இவ் விஜயத்தின் போது, அந்நாட்டு அரச தலைவர்கள் பலருடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
மேலும், இரு நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு உடன்படிக்கைகளும் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதேவேளை, கட்டாரில் உள்ள இலங்கையர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ள ஜனாதிபதி, அவர்களின் பிரச்சினை குறித்து கலந்துரையாடவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.