இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்கவுக்கு நீதிமன்ற அழைப்பாணை..

சட்டவிரோதமாக யானைக் குட்டி வைத்திருந்த குற்றச்சாட்டில், உடுவே தம்மாலோக தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் முதல் சாட்சியாளரான, வௌிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்கவுக்கு, நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த வழக்கின் சாட்சி விசாரணைகள் இன்று(24) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்படவிருந்தது.

எவ்வாறாயினும், வசந்த சேனாநாயக்க இன்று(24) நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், இராஜாங்க அமைச்சர் அத்தியவசிய கடமை காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது போனதாக, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சிரேஷ்ட சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரியப்படுத்தினார்.

இதன்படி, அவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பானை விடுக்க உத்தரவிடுமாறு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பத்துள்ளார்.

அத்துடன், வழக்கின் அடுத்த கட்ட சாட்சி விசாரணைகள் நவம்பர் 27ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

 

(rizmira)