பிரதமருக்கு, முறிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழு வழங்கிய கேள்விகளுக்கு விடையளிப்பு..

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அனுப்பியுள்ளதாக பிணை முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனைத் தவிர, மேலும் பல தகவல்கள் தேவைப்பட்டால் பிரதமரை ஆணைக்குழுவிற்கு அழைக்கவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதி காலத்தை நீடிக்காவிட்டால் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ காலவரையறை எதிர்வரும் வௌ்ளிக்கிழமையுடன்(27) நிறைவடையவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)