மகாநாயக்க தேரர்களை சந்திக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
அரசியலமைப்பு விவகாரம் குறித்து மகாநாயக்க தேரர்களினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினர் வெவ்வேறு அர்த்தங்களையும் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களின் கருத்துக்களில் காணப்படும் உண்மை நிலையை அறிந்து கொள்ள மகாநாயக்க தேரர்களை சந்திப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(rizmira)