கீழே எறியும் பொருட்கள் மூலம் பளிச்சிடும் சருமத்தை பெறுவது எப்படி?

நாம் முகத்திற்கு கொடுக்கும் கவனத்தை உடலின் பிற பகுதிகளுக்கு கொடுப்பதில்லை. உடலின் பிற பகுதிகளுக்கும் அதே அளவு கவனத்தை கொடுத்தால் தான் பார்ப்பதற்கு அழகாக தெரியும்.
நீங்கள் வீட்டிலேயே உள்ள பொருட்களை கொண்டு உங்களது அழகை பராமரித்தால் செலவும் மிச்சம், நீங்கள் எந்த விதமான பின் விளைவுகளையும் சந்திக்க வேண்டி இருக்காது.

# தேயிலை:
தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.

# ஆரஞ்ச் தோல்:
ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.

# தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவி விட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்

# முட்டை;
கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.

# வாழைப்பழம்:
பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.