நீங்கள் உண்ணும் சிக்கன், பர்கர் மற்றும் பீட்சா இப்படி எது எடுத்தாலும் அதற்கு நாம் விரும்பி தொட்டு சாப்பிடுவது இந்த தக்காளி சாஸை தான். அந்த சாஸை வீணாக கீழே போட்டு விடுவார்கள். இப்படி செய்யாமல் அந்த தக்காளி சாஸை சில க்ளீனிங் வேலைக்கு பயன்படுத்தி நாம் பலன் பெறலாமே.
தக்காளி இயற்கையாகவே அசிடிக் தன்மையுடன் காணப்படுகிறது. இதுவே அதை கெட்ச்அப் ஆக பயன்படுத்தும் போது அதிலுள்ள வினிகரால் ரெம்ப அசிடிக்காக இருக்கிறது. இயற்கையான முறையில் க்ளீனிங் செய்யலாம். எனவே கடினமான வேலை செய்யாமல் எளிதாகவே உங்கள் வீடு மற்றும் தோட்டங்களை சுத்தமாக்கி விடலாம்.
பித்தளை:
கதவு கைப்பிடி, வீட்டு பாத்திரங்கள், சிலைகள், குத்து விளக்கு போன்றவை பித்தளையால் ஆனது. இதில் நாளாக நாளாக நிறைய கருப்பு நிற திட்டுகள் படிய ஆரம்பித்து விடும். தக்காளி கெட்ச்அப்பின் அசிடிக் தன்மை இந்த கறைகளை எளிதாக நீக்கிடும். பெரிய பாத்திரத்திற்கு இந்த கெட்ச்அப்யை ஊற்றி துடைத்து கழுவினால் போதும். அதே நேரம் சிறிய பித்தளை பொருட்களை கெட்ச்அப்பிள் ஊற வைத்து கழுவினால் நல்ல மாற்றம் கிடைக்கும்.
வெள்ளி:
வெள்ளி பாத்திரத்தை கவனமாக பாதுகாக்க வேண்டும். எனவே இதை போக்க வெள்ளி பாத்திரத்தை தக்காளி கெட்ச்அப்பில் 5-10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். ரொம்ப நேரம் ஊற வைக்க வேண்டாம். இது அசிடிக் என்பதால் இதனால் வெள்ளி நகைகள் பழுதடைய வாய்ப்புள்ளது. பழைய பிரஷ் பயன்படுத்தி கூட தேய்த்தோ அல்லது துணியை பயன்படுத்தியோ கெட்ச்அப்யை பயன்படுத்தி வெள்ளி நகைகளை சுத்தம் செய்யலாம். பிறகு வெதுவெதுப்பான நீரில் முக்கி கழுவி விட்டால் உங்கள் வெள்ளி நகைகள் புதியது போல் ஜொலிக்கும்.
அடுப்பில் கருகிய பாத்திரங்கள்:
அடுப்பில் பாத்திரத்தை வைத்து விட்டு மறந்து விட்டால் போதும் பாத்திரம் கருகி அடிபிடிச்சிடும். இப்படி அடி பிடிச்ச பாத்திரத்தை தக்காளி கெட்ச்அப் ஊற்றி கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அடுப்பில் மிதமான தீயில் வைத்து சூடுபடுத்த வேண்டும். கெட்ச்அப் தண்ணீர் வற்றாத மாதிரி பார்த்து கொள்ள வேண்டும். இதை இரவு முழுவதும் ஊற வைத்து விட்டால் போதும் அடி பிடிச்ச கறுப்பை காணாமல் செய்து விடுகிறது.
உங்கள் கார் ஜொலிக்க:
காரில் படியும் தூசிகறையை தக்காளி சாஸ் எளிதாக நீக்கி விடுகிறது. எனவே உங்கள் கார் புதிது போல் ஜொலிக்கும். இதற்கு எப்பொழுதும் போல் உங்கள் காரை சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு அலசி விட்டு, துணியில் தக்காளி சாஸை எடுத்து நன்றாக காரின் மேல் தடவி பிறகு தண்ணீர் கொண்டு அலசினால் போதும் எல்லாரும் புது காரா என்று கேட்பார்கள்.