கொட்டாஞ்சேனை பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது…

கொட்டாஞ்சேனை வாசல வீதி சந்தியில் இருந்து பரமானந்த விகாரை வரை மற்றும் கொட்டாஞ்சேனை அளுத் மாவத்தை வீதியில் மேற்கொள்ளப்படும் புதிய குழாய் பொருத்தும்  செயற்பாடுகள் காரணமாக போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வீதிகளில் எதிர்வரும் 27ம் திகதி இரவு 9 மணி தொடக்கம் 30ம் திகதி அதிகாலை 5 மணி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கொட்டாஞ்சேனை வாசல வீதி சந்தியில் இருந்து பரமானந்த விகாரை வரை புதிய குழாய் பொருத்தும் செயற்பாடுகள் காரணமாக  குறித்த வீதியில் வசிக்கும் பிரதேசவாசிகள் மாத்திரம் வீதியை பயன்படுத்த முடியும் எனவும், மற்றைய வாகனங்கள் கொட்டாஞ்சேனை சென் பெனடிக் மாவத்தை ஊடாக புளூமென்டல் மாவத்தையை நோக்கி பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை , கொட்டாஞ்சேனை அளுத் மாவத்தை வீதியில் மேற்கொள்ளப்படும் புதிய குழாய் பொருத்தும்  செயற்பாடுகள் காரணமாக புறக்கோட்டை கொச்சிக்கடையில் இருந்து வரும் வாகனங்கள் ஹெட்டியாவத்தை சந்தியில் வலது பக்கம் திரும்பி ஜோர்ஜ் ஆர் த சில்வா மாவத்தையில் இருந்து புளுமென்டல் சந்தியின் ஊடாக அளுத் மாவத்தை வீதியை வந்தடைய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்குளி பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் , மாதம்பிடிய வீதியில் அல்லது சென் ஜேம்ஸச மாவத்தையின் ஊடாக போதிய சந்தியின் இருந்து ஹெட்டியாவத்தை சந்திக்கு பயணிக்க முடியும் என பொலிஸ் நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது