உக்ரைன் குண்டுவெடிப்பில் சிக்கி ஒருவர் பலி – எம்.பி. உட்பட 3 பேர் காயம்…

உக்ரைன் தலைநகர் கீவில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒரு எம்.பி. உட்பட 3 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவருக்கு சுமார் 30 வயது இருக்கக்கூடும் எனவும், காயமடைந்த மூன்று பேரில் ஒருவர் அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் இஹோர் மோசிசக் எனவும் உக்ரைன் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வேறு எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.