அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் முடிந்தால் மூன்று நாட்களுக்கு மேலான வேலை நிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுத்து காட்டுமாறு சுகாதார அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.
சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தினை முன்னிட்டு பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்நாட்டில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடியாதவர்களில் பிரதானமானவர்களே வைத்தியர்கள். அவர்கள் ஏழு தினங்களும் பணிபுரிய வேண்டியவர்கள். அவ்வாறான நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்களாயின் அவர்களை மக்கள் கவனித்துக் கொள்வார்கள்.
அவர்களின் தாயார்களையும், பிள்ளைகளையும், வீடுகளையும் கூட மக்கள் கவனித்துக் கொள்வார்கள் எனவும் மூன்று நான்கு நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்களாயின் அதன் விளைவை அவர்கள் அறிய முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(reeshma)