அனர்த்தங்களினால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்…

வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்ட குடும்பங்களுக்காக நிரந்தர வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

மேலும், மண்சரிவு அபாயமுள்ள வலயங்களில் வாழும் 5 மாவட்டங்களில் பாதிக்கப்படுகின்ற மக்களை பாதுகாப்பான இடங்களில் மீளக்குடியமர்த்த வேண்டுமென தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் ஆலோசனை வழங்கி இருந்தது.

இந்நிறுவனம் இனங்கண்ட 14 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை அமைக்கும் திட்டம் அமுலாக்கப்படவுள்ளது. இதற்காக அமைச்சரவையில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.