உருளைக்கிழங்கை அழகை பராமரிக்க பயன்படுத்தி பார்த்திருக்கீங்களா?

உருளைக்கிழங்கு எல்லாருக்கும் பிடிக்கும். அதனை சாப்பிட மட்டுமல்ல உங்களுடைய அழகை பராமரிக்கவும் அதனை பயன்படுத்தலாம்.

கருவளையம் :
உருளைக்கிழங்கினை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அந்த சாறினை கண்களைச் சுற்றி தேய்த்து காய்ந்ததும் கழுவி விடலாம். இதனை வாரத்தில் இரண்டு நாட்கள் செய்யலாம்.

எண்ணெய் சருமம் :
உருளைக்கிழங்கு சாறும் மற்றும் எலுமிச்சை சாறு இரண்டையும் அரை டீஸ்பூன் அளவு கலந்து கொள்ளுங்கள். அத்துடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகம் மற்றும் கழுத்துப்பகுதிகளில் தடவி பத்து நிமிடங்கள் காத்திருந்து தண்ணீரில் கழுவி விடலாம். இப்படிச் செய்வதால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் எல்லாம் நீங்கி முகம் பொலிவு பெறும்.

நிற மாற்றம் :
நீண்ட நேரம் வெயிலில் பணியாற்றுபவர்களுக்கு முகத்தில் திட்டு திட்டாக நிறமாற்றங்கள் இருக்கும். தயிருடன் உருளைகிழங்கு பேஸ்ட் கலந்து பேஸ் மாஸ்க்காக போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் அது நன்றாக காய்ந்ததும் கழுவி விடலாம்.

தழும்புகள் :
பருக்கள், கரும்புள்ளிகள் தோன்றி மறைந்தாலும் அவற்றால் ஏற்படும் தழும்புகள் மறைவதில்லை. உருளைக்கிழங்கு பேஸ்ட்டுடன் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசி வர முகத்தில் இருக்கும் தழும்புகள் எல்லாம் மறைந்திடும்

நீளமான கூந்தலுக்கு :
முடியை உதிராமல் தவிர்ப்பது மட்டுமல்ல புதிய முடிகளை உருவாக்கவும் செய்ய வேண்டும் அப்போது உங்களுக்கு அடர்த்தியான கூந்தல் கிடைக்கும். இதற்கு அரை கப் உருளைக்கிழங்கு சாறுடன் அரைகப் வெங்காய்ச் சாறு கலந்து தலை முழுவதும் தடவி ஒரு மணி நேரம் ஊற வேண்டும். இப்படிச் செய்வதானல் முடியின் வேர்கால்களுக்கு இரத்த ஓட்டம் அதிகரித்து முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.