தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் குழு கூட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது.
இதில் தேசிய அமைப்பாளர் பியசிறி விஜேநாயக்க நேற்று(25) தெரிவித்த கருத்து தொடர்பிலும், புதிய அரசியல் அமைப்பு தொடர்பிலும் கலந்துரையாடப்படுவதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச நாடாளுமன்றத்திற்கு குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என அண்மையில் கூறி இருந்தார்.
இந்த கருத்து தொடர்பில் விமல்வீரவன்ச, பொது மக்களிடம் மன்னிப்பு கோரவேண்டும் என அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் பியசிறி விஜேநாயக்க நேற்று(25) கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்நிலையிலேயே, பியசிறி விஜேநாயக்கவின் கருத்து தொடர்பில் கட்சியின் அரசியல் குழு அவசரமாக ஒன்று கூடி தற்போது ஆராய்ந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)