இந்தோனேஷியாவில் டாங்ஜெராங் என்ற இடத்தில் உள்ள பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையில் இன்று(26) ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தீ மற்றும் கரும்புகை காரணமாக மீட்ப்புபணி சவாலாக இருப்பதாக மீட்புப்படையினர் கூறியுள்ளனர்.
மேலும், 103 தொழிலாளர்கள் விபத்து நடந்த வேளையில் உள்ளே இருந்ததாக கூறப்படுகிறது. 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 43 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.