ரஷ்யாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள கால்பந்தாட்ட உலகக்கிண்ணத் தொடரை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு முக்கிய இலக்காகக் கொண்டுள்ளது என்று பன்னாட்டு ஊடகங்கள் பலவும் செய்தி வெளியிட்டன.
ஈராக், சிரிய நாடுகளின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றி அவற்றை ஒரு தனிநாடு என்று அறிவித்திருந்தது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு.
அந்த அமைப்பின் பிடியில் இருந்து இந்த வருடத்தின் மத்திய பகுதியில் மீண்டது ஈராக். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் ஆதிக்கம் பெரியளவில் உள்ள ஒரே நாடாக தற்போது சிரியாவாக இருந்தாலும்,
அதன் ரக்கா நகரமும் அண்மையில் மீட்கப்பட்டது.
இந்நிலையில் ரஷ்யாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு தனது முக்கிய இலக்குகளில் ஒன்றாகக் கொண்டுள்ளது என பல பன்னாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஆர்ஜென்ரீனா அணியின் பிரபல நட்சத்திர தலைவர் மெஸ்ஸியின் கண்ணில் இருந்து இரத்தம் வடிவது போன்றதொரு ஒளிப்படத்தை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாக பரப்புரை செய்யும் இணையத்தளமொன்று வெளியிட்டுள்ளது.
இதனால் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் இலக்கு மெஸ்ஸியா அல்லது அடுத்த உலகக் கிண்ணத் தொடரா என பரபரப்புக்கள் உச்சம் தொட்டுள்ள நிலையில், உலகக் கிண்ணத் தொடருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பலமடங்கு அதிகரித்துள்ளது ரஷ்யா.
அதேபோல் மெஸ்ஸிக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளும் இரட்டிப்புச் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன..
(rizmira)