நாவற்குழி புகையிரத புதிய பாலத்தின் புனரமைப்பு பணிகள் காரணமாக கடந்த 23 ஆம் திகதி நாவற்குழி புகையிரத நிலையத்துடன் நிறுத்தப்பட்டிருந்த புகையிரத சேவை நேற்று(26) மாலை தொடக்கம் யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் வரை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வருகை தந்த யாழ்தேவி புகையிரதம் நாவற்குழியை அடைந்த நிலையில் புதிய பாலத்தில் இருந்து யாழ் புகையிரத நிலையத்தை நோக்கி தனது பயணத்தை தொடர்ந்தது.
இந்தியாவின் IRCON புகையிரத அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் நீண்டகால உத்தரவாதத்துடன் இப் புதிய பாலம் புனரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.