இலங்கையின் வீடமைப்பு அபிவிருத்தித் திட்டங்களுக்கு இந்தியா 60 கோடி ரூபாவை வழங்கியிருப்பதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் சிரிபோபுர பிரதேசத்தில் ‘சந்தோஷகம’ என்ற பெயரிலான 44வது கிராமம் நேற்று(26) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வின்போது இந்தியாவும் இலங்கையும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. இதற்கான உடன்படிக்கையின் கீழ் 1200 வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இவற்றில் 600 வீடுகள் தென்மாகாணத்திலும், ஏனைய வீடுகள் 25 மாவட்டங்களிலும் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கிராம சக்தி மாதிரி கிராம வீடமைப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளின் பங்களிப்போடு வீடுகள் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.