அவுஸ்திரேலியாவின் அவுஸ்திரேலியாவின் துணைப் பிரதமர் பார்னபி ஜோய்சி மற்றும் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் தெரிவு சட்ட ரீதியற்றது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த நபர்கள் இரட்டைக் குடியுரிமை பெற்றிருந்ததாலேயே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் துணைப் பிரதமர் பார்னபி ஜோய்சி அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் குடியுரிமையை பெற்றுள்ளார்.
நீதிமன்றத்தின் குறித்த இந்த தீர்ப்பு காரணமாக அவுஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்பல்லின் அரசாங்கம் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் மேலும் குறிப்பிடுகின்றன.
(rizmira)