யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்து வாயில்களையும் மூடி போராட்டம்…

யாழ், பல்கலைக்கழகத்தின் அனைத்து நுழைவாயில்களையும் மூடி இன்று(30) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அனுராதபுர சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாகவும், குறித்த கைதிகளின் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு கோரியும் யாழ், பல்கலைக்கழக சமூகத்தினால் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.