இலங்கை சுங்கத் திணைக்களத்தின் 2017ம் ஆண்டுக்கான வருவாய் தொடர்பாக அரசினுள் தவறான அபிப்பிராயம் ஒன்று பிரச்சாரம் செய்யப்படுவதாக அரச தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த தகவல்களின் படி, 2017ம் ஆண்டில் கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக சுங்க திணைக்களத்தின் இலக்கு வருவாய் மற்றும் உண்மையான வருவாய் ஆகியவற்றினை வெளிப்படையாக ஆதாரமாக முன்வைத்து குறித்த பிரச்சாரங்கள் முன்னேடுக்கப்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தகவல்களின் அடிப்படையில், இலங்கை சுங்கத் திணைக்களம் உள்ளிட்ட அரசு வருவாய் குறித்து தவறான தகவல்களை பிரச்சாரம் செய்யும் வரிசையில் முதல்வராய் இருப்பது என குற்றஞ்சாட்டப்படுபவர் ரவி கருணாநாயக்க என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
(rizmira)