இந்தோனேசிய கடற்படை கப்பல் ‘பிமா சுசி ‘ இலங்கைக்கான நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தை நேற்று(30) வந்தடைந்த இக்கப்பலினை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றனர்.
இக்கப்பல் இங்கு தரித்திருக்கவுள்ள நாட்களில் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விளையாட்டு நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கப்பலின் சிப்பந்திகள் பங்கேற்கவுள்ளனர்.
இதேவேளை, குறித்த கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜத்தினை நிறைவு செய்தபின்னர் எதிர்வரும் 2ஆம் திகதி நாட்டைவிட்டு புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.