நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பனிமூட்டத்துடன் மழைவீழ்ச்சி காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் காற்று வீசக் கூடும் எனவும் மலைப்பாங்கான பகுதிகளில் அதிக மழை பெய்வதற்கான வாய்ப்பு காணப்படுவதாகவும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
சில பிரதேசங்களில் மழைவீழ்ச்சி 100 மில்லி மீற்றர் வரை எதிர்பார்க்கப்படுவதோடு, மத்திய, சப்ரகமுவ, மேற்கு, வட மேற்கு, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு மிக அதிகமான மழை வீழ்ச்சியாக 150 மில்லி மீற்றர் வரை எதிர்பார்க்கப்படுகிறது.
மின்னல் மற்றும் இடியுடன் கூடிய காலநிலை நிலவும் பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.