இலங்கை வந்தடைந்தார் அவுஸ்திரேலிய பிரதமர்…

அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் இலங்கை வந்தடைந்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கரமசிங்க ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த கலந்துரையாடல்களின் போது இருநாடுகளுக்கும் இடையேயான பொருளாதாரம் மற்றும் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு மேற்கொள்ளப்படும் மனித கடத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.