‘கிறீன் கார்ட்’ லாட்டரியை அகற்றுகிறது அமெரிக்கா…

‘கிறீன் கார்ட்’ லாட்டரியை அகற்ற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் யோசனை தெரிவித்துள்ளார்.

குறித்த இந்த லாட்டரி நியூயார்க்கில் ஒரு டிரக் தாக்குதல் சந்தேக நபருக்கு அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதித்துள்ளது எனவும், அவர் குடிவரவு திட்டத்திற்கு பதிலாக ஒரு தகுதி அடிப்படையிலான முறைமைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு நிதிகளை குறைக்கும் டிரம்ப்பை ஏலவே குற்றஞ் சாட்டிய செனட்டர் சக் ஸ்குமர் மீதும் ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்நிலையில், சய்புல்லோ சய்போவ் என்ற சந்தேகநபர் எவ்வாறு அமெரிக்காவுக்குள் குடியுரிமை பெற்று வந்தார் என்பதை அதிகாரிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.