வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு நம்மை அழகு செய்து கொள்வது நல்லது. வீட்டில் பயன்படுத்தும் எண்ணெய்கள், தேங்காய் நீர், ரோஸ் வாட்டர், பழங்கள், செடிகள் போன்றவை அழகு பராமரிப்பில் பயன்படுத்தப்படும் பொருட்களாகும். வீட்டில் தயாரிக்க கூடிய பேஷியல் மிஸ்ட் மற்றும் ஸ்ப்ரே பற்றி நாம் பார்க்க போகிறோம்.
வெள்ளரிக்காய் மற்றும் கற்றாழை மிஸ்ட் :
வெள்ளரிக்காய்.
லெமன் ஜூஸ்
கற்றாழை ஜெல்
செய்முறை:
வெள்ளரிக்காயை வெட்டி அரைத்து விழுதாக்கி, ஒரு துணியில் வடிகட்டி அதன் சாறை மட்டும் எடுத்துக் கொள்ளவும். இதில் எலுமிச்சை சாறை கலக்கவும். இதில் 1 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை தடவவும். 1 ஸ்பூன் ரோஸ் வாட்டரை இதில் சேர்க்கவும். எல்லாவற்றையும் சேர்த்து கலக்கி ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றவும். இதனை முகத்தில் தெளித்து சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவலாம். ஒரு நாளைக்கு 3 முறை இதனை பயன்படுத்தலாம்.
வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை தோல் மிஸ்ட் :
தேவையான பொருட்கள்:
வெள்ளரிக்காய் – ½ துண்டு
எலுமிச்சை தோல் – 2
செய்முறை:
கோப்பையில் வெந்நீரை ஊற்றி அதில் அரிந்த வெள்ளரிக்காய் துண்டுகள் மற்றும் எலுமிச்சை தோலை போடவும். இரவு முழுதும் அப்படியே மூடி வைக்கவும். மறு நாள் காலையில் அந்த நீரை வடிகட்டி, ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றவும். நன்றாக குலுக்கி விட்டு, தினமும் பயன்படுத்தவும். தேவைப்பட்டால் இதில் விட்டமின் ஈ எண்ணெய்யையும் சேர்த்துக் கொள்ளலாம்.
வெள்ளரிக்காய் மிஸ்ட் பயன்பாட்டில் மேலும் சில குறிப்புக்கள்:
# இதனை ப்ரிட்ஜில் வைத்து அடுத்த சில நாட்கள் பயன்படுத்தலாம். # பயன்படுத்துவதற்கு முன் நன்றாக குலுக்கிவிட்டு பின்பு பயன்படுத்தவும். # சென்சிடிவ் சருமமாக இருந்தால், எலுமிச்சையை பயன்படுத்த வேண்டாம்.
# ரோஸ் வாட்டருக்கு பதில், உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஆரஞ்சு நீர் அல்லது தேங்காய் நீரை பயன்படுத்தலாம்.
# இந்த மிஸ்டை சேமித்து வைக்க மெட்டல் பாட்டில்களை பயன்படுத்த வேண்டாம். இந்த உலோகம் , இதில் சேர்க்கப்படும் பொருட்களோடு வினை புரியலாம். ஆகையால் உயர் ரக பிளாஸ்டிக் பாட்டிலை பயன்படுத்தலாம் .