ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

வெலிகம பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் குண்டர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதாகைகள் ஒட்டிக்கொண்டிருந்த ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் இருவர் காயடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் அதிகாலை 02 மணியளவில் வெலிகம, மோதர பாலர் பாடசாலை அருகில் இரும்பு கம்புகளினால் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்தவர்கள் தெனிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்களாகும்.

ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர்களின் பதாதைகளை ஒட்டிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் டபல் கெப் வாகனம் மற்றும் நீல நிறமுடைய காரில் 12 குண்டர்கள் இரும்பு கம்பிகளுடன் வந்திறங்கி ஒருவரின் தலையில் துப்பாக்கியை வைத்து உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதோடு இளைஞர்களையும் தாக்கியுள்ளனர்.

பின்னர் அவர்களின் மோட்டார் சைக்கிளையும் தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரது பெயர்கள் தெரியவந்துள்ளதாகவும் அவர்கள் அப்பிரதேசத்தை விட்டு தப்பி சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாக பொலிஸ் வாட்டரங்கள் தெரிவிக்கின்றன.

(riz)