இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான பி.சக்திவேல், பிலிப் குமார் உட்பட மேலும் மூவரை கைது செய்து ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.
ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர்ப் பலகையில் சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயர் நீக்கப்பட்டமைக்கு எதிராக கடந்த 26ஆம் திகதி ஹட்டன் நகர மத்தியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஆதரவாளர் ஒருவரின் வர்த்தக நிலையத்திக்கு கல்வீச்சு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் மத்திய மாகாண உறுப்பினருமாகிய பி.சக்திவேல், மத்திய மாகாணசபை உறுப்பினர் பிலிப்குமார் நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மலர்வாசகன், முன்னாள் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் லோகநாயகி உட்பட தலவாக்கலை நகரசபை முன்னாள் உறுப்பினர் பாரதிதாசன் ஆகியோர் நேற்று(01) கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.