மொட்டில் தனித்து களமிறங்குகிறது மஹிந்த அணி…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உள்ளூராட்சித் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.

எதிர்வரும் 12ஆம் திகதி அனுராதபுரவில் உள்ள சல்காடோ மைதானத்தில் முதலாவது பிரச்சாரக் கூட்டம் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன், குறித்த இந்தக் கூட்டத்திலும் பங்கேற்கவுள்ளதாகவும் குறித்த கட்சியின் பிரச்சாரப் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமன்ன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நாடு முழுவதிலும் தாமரை மொட்டு சின்னத்தில் தனித்துப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

E – (rizmira)