கண்களுக்கு கீழே கருவளையம் இருந்தால் உங்களது முகம் மிகவும் பொலிவிழந்து, சோர்வாக காணப்படும். இது முகத்தில் ஒரு குறையாகவே தெரியும். இதற்காக நீங்கள், வெறும் மேக்கப் மட்டும் செய்தால் போதாது. சத்தான உணவுகளையும் சாப்பிட வேண்டியது மிகவும் அவசியமாகும்.
வெள்ளரி:
உருளைக்கிழங்கு அல்லது வெள்ளரியில் உள்ள ஸ்டார்ச் கருவளையங்களுக்கு மிக நல்ல மருந்து. அவற்றை நறுக்கிய உடனேயே கண்களின் மேல் வைத்துக் கொண்டால்தான் பலன்
டீ பேக்:
உபயோகித்த டீ பைகளை கண்களின் மேல் வைப்பது முழுமையான பலன் தராது. திக்கான டீ டிகாக்ஷனை எடுத்து குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். அதில் பேப்பர் மாதிரி மெலிதாக வெட்டிய பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்துக்கொண்டு 5 முதல் 7 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும். கிரீன் டீயாக இருந்தால் இன்னும் சிறப்பு.
காய்கறிகள்:
முள்ளங்கிச் சாறு, கேரட் சாறு, பீட்ரூட் சாறு (தண்ணீர் விடாமல் அரைத்துப் பிழிந்தது) இந்த மூன்றையும் கலந்து, 5 மி.லி. கிளிசரினும் 5 மி.லி. எலுமிச்சைச் சாறும் சேர்த்து குளிர்சாதன பெட்டியில் வைத்து தேவைப்படும் போது பஞ்சில் நனைத்துக் கண்களின் மேல் வைத்துக் கொள்ளலாம்.
மேக்கப்:
கண்களுக்குப் போடுகிற எந்த மேக்கப்பையும் நீக்காமல் தூங்கக் கூடாது. மேலும் கண்களுக்கு உபயோகப்படுத்தும் மேக்கப் பொருட்கள் கட்டாயமாக தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டியது அவசியம்
நைட் க்ரீம்:
இரவில் கண்களுக்கடியில் தரமான நைட் க்ரீம் தடவிக் கொள்ளலாம். அண்டர் ஐ க்ரீம் போன்றவற்றையும் கண்களுக்கு பயன்படுத்தலாம்.
உணவில்:
விட்டமின் சி சத்துள்ள தக்காளி, மாங்காய், கொய்யா, குடைமிளகாய், ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றை அதிகளவில் சேர்க்க வேண்டும். விட்டமின் சி சத்து உடலில் சேரும் போது நோய் எதிர்ப்பு சக்தி கூடும். வேறு ஏதேனும் உடல் நலக் கோளாறு காரணமாக கண்களுக்கடியில் கருவளையம் வராமலிருக்கவும் இது உதவும்.