தெமட்டகொட கடத்தல் விவகாரம் – ஹிருணிகா மறுப்பு..

தெமட்டகொட பகுதியில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை, பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தவிர்த்து ஏனைய எட்டு சந்தேக நபர்களும் இன்று(06) ஒப்புக் கொண்டுள்ளனர்.

கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 21ம் திகதி, ஹிருணிகாவுக்கு சொந்தமானதாக கூறப்படும் வாகனம் ஒன்றில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இதனையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 09 பேருக்கு எதிராக, சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கமைய, இன்று(06) குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

E-(rizmira)