மெர்சல் படக்குழுவினருக்கு விருந்தளித்த விஜய்…

மெர்சல்’ படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, படக்குழுவினருக்கு விருந்தளித்திருக்கிறார் விஜய்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மெர்சல்’. தீபாவளியன்று வெளியான இப்படத்துக்கு வசூல் ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. உலகம் முழுவதும் மொத்த வசூல் சுமார் 200 கோடி ரூபாயை கடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு, தனது முந்தைய படங்களின் வசூல் முறியடிப்பு உள்ளிட்டவற்றால் பெரும் சந்தோஷமடைந்தார் விஜய்.

இதனால் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் அட்லி, ஒளிப்பதிவாளர் விஷ்ணு, கலை இயக்குநர் முத்துராஜ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் கடந்த நவம்பர் 2 ஆம் திகதி விருந்தளித்திருக்கிறார் விஜய். இதில் படக்குழுவினர் தவிர வேறு யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்துக்காக தயாராகி வருகிறார் விஜய். சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது.