சுருக்கமில்லாத சருமத்திற்கு தினமும் நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்…

சரும பராமரிப்பு பொருட்களை சரியான விதத்தில் பயன்படுத்தினால் மட்டுமே உங்களுக்கு ஆரோக்கியமான சருமமும் அழகான தோற்றமும் கிடைக்கும்.

காலையில்
க்ளீன்சர்:
முதலில் காலையில் எழுந்ததும் உங்கள் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு உங்கள் முகச் சருமத்திற்கு ஏற்ற க்ளீன்சர் மற்றும் இயற்கை பொருட்கள் அடங்கிய க்ளீன்சரை பயன்படுத்தலாம். இது முடிந்த பிறகு உங்கள் முகத்தை நன்றாக மென்மையான டவல் கொண்டு துடைக்க வேண்டும்.

பேஷியல்:
டோனர் அடுத்ததாக உங்கள் முகத்திற்கு அப்ளே செய்யப் போவது பேஷியல் டோனர். விரைவாக உறிஞ்சும் தன்மை கொண்ட இந்த பியூட்டி பொருள் உங்கள் சருமத்தை மென்மையாக மற்றும் போதுமான ஈரப்பதம், நிறத்தை கொடுக்கிறது.

மாய்ஸ்சரைசர் அல்லது சன் க்ரீன்:
முன்னாடி பயன்படுத்திய பொருட்களுக்கு பின் கொஞ்சம் மாய்ஸ்சரைசரை பரப்பி விட வேண்டும். நீங்கள் வீட்டிலேயே இருப்பதாக இருந்தால் மாய்சரைசரும் வெளியே செல்வதாக இருந்தால் சன்ஸ்கிரீன் லோசனையும் பயன்படுத்த வேண்டும். இதனால் உங்கள் முகம் நல்ல மாய்ஸ்சரைசர் தன்மையுடன் சூரிய ஒளி தாக்கத்திலிருந்தும் பாதுகாக்கப்படும்.

இரவு நேரத்தில்
மேக்கப் ரிமூவர்:
ஒவ்வொரு நாள் இறுதியிலும் மேக்கப் ரிமூவர் கொண்டு உங்கள் மேக்கப்பை கலைக்க மறந்து விடாதீர்கள். இது சருமத்தை பழைய நிலைக்கு கொண்டு வருவதோடு பியூட்டி பொருட்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது

ஐ க்ரீம்:
காலையில் எழும் போது கண்கள் வீங்கி இருக்கும் அல்லது கருவளையம் இருக்கும். எனவே இரவில் படுப்பதற்கு முன் ஐ க்ரீமை அப்ளே செய்து விட்டு படுத்தால் கண்களை புத்துயிர் பெறச் செய்து விடும்.

மாய்ஸ்சரைசர்:
பிறகு கடைசியாக கொஞ்சம் மாய்ஸ்சரைசர் எடுத்து முகத்தில் பரப்பி விட வேண்டும். இதன் மூலம் காலையில் எழும் போது மென்மையான புத்துணர்ச்சியான சருமத்தை பெறலாம்