நாட்டில் நிலவும் பெற்றோல் தட்டுப்பாடு தொடர்பில் ஆராய்ந்து விளக்கமளிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடயத்திற்குரிய அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.
இவ்வாறு திடீரென பெற்றோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை சிக்கலை ஏற்படுத்தும் செயலாக இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதாகவும் கொழும்பில் இன்று(07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அரசாங்கம் இந்த நிலைக்கு பொறுப்பு கூறவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.
E-(reeshma)