பாடசாலை வளவினுள் விழுந்த விமானப் பாகம்

தலங்கம, எம்.டி.எச் ஜயவர்த்தன முன்பள்ளி வித்தியாலய மைதானத்தில் சிறிய ரக விமானம் ஒன்றின் பாகம் உடைந்து விழுந்துள்ளது.

இச்சம்பவம் இன்று (03) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

விமானத்தின் இரண்டரை அடி நீளமுள்ள பாகமே இவ்வாறு விழுந்துள்ளது. சீ பிளேன் என்ற வகையின் பாகமே மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

(riz)