அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள பல்கலைகழகத்தில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பல்கலைகழக வளாகத்தினுள் இன்று(08) ஒரு மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. அந்த நபர் ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் ஒருவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து பல்கலைகழகம் சிறிது நேரம் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.