நூறு வயதிற்கு மேற்பட்ட பிரஜைகளுக்கு மாதாந்த கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
தற்பொழுது 100 வயதிற்கு மேற்பட்ட 350 பேர் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 100 வயதிற்கு மேற்பட்ட வயோதிபர்கள் நாடொன்றில் இருப்பது அந்நாட்டின் சுகாதாரத்துறை அபிவிருத்தியில் காணப்பட்டுள்ள முன்னேற்றமாக கருத முடியும்.
இதற்கமைவாக இவர்களது வாழ்க்கையை பாதுகாக்கும் நோக்கில் 100 வயதிற்கு மேற்பட்ட குறைந்த வருமானத்தை கொண்ட முதியவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா வழங்குவதற்கு சமூக வலுவூட்டல்கள் நலன்புரிகள் மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சர் எஸ்பீ திசாநாயக்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
E – (reeshma)