ரோயல் சேலஞ்சர்ஸ் கை மாறுகிறது

ரோயல் சேலஞ்சர்ஸ் கை மாறுகிறது

கிங் பிஷர் நிறுவனத்தின் விஜய் மல்லையா வசம் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்ஸ் நிறுவனம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் தலைவர் சஜ்ஜன் ஜிந்தால் கூறும்போது, “இந்தியாவில் கிரிக்கெட் அதிகம் பேரால் விரும்பக்கூடிய விளையாட்டாக உள்ளது.

எனவே, ஐபிஎல் அணியை வாங்க முடிவெடுத்துள்ளோம். ஆனால், எந்த அணி என்பதைச் சொல்ல மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அந்த அணி பெங்களூரு அணியா எனக் கேட்டதற்கு, அதை மறுக்கவோ, ஆமோதிக்கவோ இல்லை. “அது அவர்களைப் (ஆர்சிபி) பொறுத்தது” என்றார்.

(riz)