சிலருக்கு உதடுகள் வறண்டு இருக்கும். இது ஒரு சில ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் சில பழக்கங்களால் ஏற்படுகிறது. இந்த பகுதியில் உங்களது வறண்ட உதடுகளை மேம்படுத்துவது எப்படி என்பது பற்றி காணலாம்.
வெண்ணெய்:
வறண்ட உதடுகளைக் கொண்டவர்கள் நாள்தோறும் உதடுகளின்மேல் வெண்ணெய் தடவி வந்தால் வறண்ட உதடுகள் மாறி வழவழப்பான அழகான உதடாகும்.
தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெயில் அரை டீஸ்பூன் சாதிக்காய் பொடியைச் சேர்த்து குழைத்து உதடுகளின் மேல் தடவி வந்தால் உதடுகள் சிவந்து, பளபளப்பாக காட்சியளிக்கும்.
பீட்ரூட்:
பீட்ரூட் பழத்தின் சாற்றை உதடுகளின் மீது பூசி வந்தால் உதடுகள் அழகாகும். மாதுளம் பழத்தின் சாறும் உதடுகளை அழகாக்கும்.
ஒத்தடம்:
வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் அவை ரோஜா போல மென்மையாக மாறும்.
இது வேண்டாம்!
மற்றவர்கள் உபயோகிக்கும் லிப்ஸ்டிக்குகளைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது. அதனால் தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.இப்போது மேட் பினிஷ் லிப்ஸ்டிக்குகள் மிகவும் பிரபலம். அவற்றில் ஈரப்பதம் குறைவு என்பதால் உதடுகளில் உள்ள இயற்கையான எண்ணெய்களை அழித்து விடும். எனவே அவற்றை எப்போதாவது தான் உபயோகிக்க வேண்டும்.
முட்டை:
முட்டையில் உள்ள மிகச்சிறந்த ஊட்டச்சத்துகள், உதடுகளை காப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. முட்டையின் வெள்ளைக் கருவோடு தேன் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை அழகு பெறும்.
ஐஸ் கட்டி:
லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பாக உதடுகளில் ஐஸ் கட்டிகளை ஒற்றி எடுத்தால், லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.
கடித்தல்:
உதடுகளைக் கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அது தவிர்க்கப்படவேண்டிய பழக்கம். அதனால் உதடுகள் வறண்டு போகவும், நிறம் மாறி அசிங்கமாகக் காட்சியளிக்கவும் கூடும். எனவே இது தவிர்க்கப்பட வேண்டும்.