இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கான வியாபார பாண்ட வரி குறைவடைந்துள்ளதாக, நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அதன்படி, அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றுக்கு விசேட வியாபார பாண்ட வரி முறையின் கீழ் வரிகள் குறைக்கப்பட்டுள்ளன.
கிழங்கு – ரூ .39
வெங்காயம் – ரூ.39
பருப்பு – ரூ.15
கருவாடு – ரூ.50
தேங்காய் எண்ணெய் 01L – ரூ.25
மரக்கறி எண்ணெய் 01L– ரூ.25
குறித்த சலுகையினால் அரசிற்கு 1.5 பில்லியன் ரூபா செலவாகின்றதாகவும் ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்திருதார்.
மேலும், குறித்த சலுகை இன்று(08) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
E -#####