இலங்கைக்கு இந்தியா எரிபொருள் உதவி..

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வுகாண இந்தியா முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.

சாத்தியமான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் நேற்று(08) தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடியபோது இந்திய பிரதமர் கூறியதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து 21 ஆயிரம் கிலோலீற்றர் பெற்றோலை ஏற்றிக் கொண்டு நேற்று(08) கப்பல் ஒன்று புறப்பட்டது. கொச்சி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மேலதிக பெற்றோலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்படும் பட்சத்தில் கூடுதலான பெற்றோலை அனுப்பி வைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.