நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் 100 மில்லிலீற்றக்கு அதிகமாக மழைவீழ்ச்சி காணப்பட்டதினால் மேலும் மழை தொடருமாயின் மண்சரிவு , பாறை விழுகை, நிலவெட்டு சாய்வு, மற்றும் தரை உள்ளிறக்கம் என்பவற்றின் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறத் தயார் நிலையில் இருக்குமாறு குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் நேற்று(08) மாலை 6.30 மணியிலிருந்து இன்று(09) மாலை 6.30 மணிவரையில் இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
####