தமிழ் தொலைக்காட்சிகளில் இப்போது நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
இதில் டிடி, அஞ்சனா, ரம்யா என பெண் தொகுப்பாளினிகள் கலக்கி வருகிறார்கள். ரம்யமா ஏற்கனவே ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன் படத்தில் கேரக்டர் ரோல்களில் நடித்திருந்தார்.
தற்போது இயக்குனர் வெற்றி மாறன் மற்றும் நடிகர் சமுத்திரகனி நடிக்கும் சங்க தலைவன் என்னும் படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறராம். இப்படம் ஈரோடு, சேலம், திருப்பூர் கைத்தறி நெசவாளர்கள் சந்திக்கும் பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்படுகிறதாம்.