………… UPDATE
05:46 PM நாளை (10) காலை 9.30 மணிக்கு, நாடாளுமன்ற சபை நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கும் என்று, சபாநாயகர் அறிவித்தார்.
05:45 PM 2018ஆம் ஆண்டுக்கான பாதீட்டு வாசிப்பை, அமைச்சர் மங்கள சமரவீர முடித்துக்கொண்டார்.
05:44 PM குறுந்தகவல் மூலம் வெளியிடப்படும் விளம்பரங்களுக்கு வரி அறவிடப்படும்.
05:42 PM உள்நாட்டு அல்லாத வெளிநாட்டு மதுபானங்களுக்கு வரி
05:40 PM வங்கிப் பரிமாற்றல்களுக்காக 1000 ரூபாய்க்கு 20 சதம் வரி அளவிடப்படும்.
05:38 PM 2018ஆம் ஆண்டுக்குள், 1.9 டிரில்லியன் ரூபாய் கடன் செலுத்தப்படவேண்டும்.
05:33 PM காணாமல் போனோர் அலுவலகத்தை செயற்படுத்துவதற்கு 1.4 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
05:30 PM தம்புளை மற்றும் கொழும்புடன் இணைக்கப்பட்ட நவீன பொருளதார மையமொன்று, யாழ்ப்பாணத்தில் நிறுவப்படவுள்ளது.
05:29 PM வடக்கு மற்றும் வடகிழக்கு மாகாணத்தில், கடன் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளவர்களுக்கு, சிறிய வட்டியினாலான கடன் வசதிகள் வழங்குவதற்கு, 1 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
05:28 PM ஓய்வுக்குப் பின்னர், எதிர்காலத்துக்கான விவசாய காப்பீடு.
05:27 PM வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் 50,000 செங்கல் வீடுகள் நிர்மாணிக்கப்படும். வடக்கு கிழக்கு வீடமைப்புக்கு 3 பில்லியனும் பெருந்தோட்டத்துக்கு 2 பில்லியனும்.
05:22 PM கலைஞர்களுக்கான மருத்துவ காப்பீடு.
05:21 PM தொல்பொருள் தளங்களின் புனரமைப்புக்கு, 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
05:19 PM இரத்தினபுரி, வெலிமடை நீதிமன்ற வளாகங்களை, மாற்ற இடங்களுக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை.
05:19 PM பௌத்த வாசிகசாலையொன்றை அமைப்பதற்கு, 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு,
05:13 PM நீதிமன்றங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு, நவீன பதிவு செய்யக்கூடிய வகையிலான இயந்திரங்களுடன் கூடிய வசதிகளுக்கு 900 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
05:11 PM அமைதிப்படைக்கு, இலங்கையில் இருந்து அனுப்பப்படும் இராணுவத்தினரின் எண்ணிக்கை அதிகரிக்குமாறு, ஐ.நா கோரியுள்ளது. அதில் பங்கேற்கும் இராணுவத்துக்கு பயிற்சியளிப்பதற்கு 750 மில்.ஒதுக்கீடு,
05:10 PM பொலிஸ் மற்றும் குற்றப் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு, 500 மில்லியனுக்கு அதிகமான நிதியொதுக்கீடு,
05:08 PM வன விலங்குகள் குறித்து கவனம் செலுத்தப்படும்.
05:07 PM குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை, 20,000 வீடுகளைக் கொண்ட தொகுதி, 2020இல் நிர்மாணிக்கப்படும்.
05:06 PM பாடசாலை மாணவர்களுக்கு தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சுகாதார காப்புறுதித்திட்டம் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும்.
05:05 PM லயன் திட்டங்களை ஒழித்து 25,000 வீடுகளை அமைக்கும் மத்தியத்திட்டத்துக்கு 25,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு,
05:04 PM வடக்கில் இடம்பெயர்தோருக்காக ஆரம்பிக்கபட்டுள்ள வீடமைப்புத்திட்டத்துக்கு, 3000 மில்லியன் ஒதுக்கீடு
05:03 PM மதுபானத்தின் மீது, தேசியத்தைக் கட்டியெழுப்பும் வரி 2018 ஏப்ரல் 1ஆம் முதல் அறவிப்படும்.
05:02 PM எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் நோய் அறிகுறிகளை, ஆரம்பக்கட்டத்தில் கண்டுபிடிப்பதற்கு, 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடு,
05:01 PM குளிர்பானங்களில் சேர்க்கப்படும் ஒரு சதவீத சீனியின் அளவுக்கு 50 சதம். வரி.இன்று இரவிலிருந்து அமுலில்.
04:58 PM சுகாதாரத் துறையை அபிவிருத்தி செய்ய 200 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
04:57 PM விளையாட்டு காலணிகளில் இறக்குமதி வரி நீக்கப்படும்.
04:56 PM மஹாபொல புலமைப்பரிசிலுக்கு, வருடாந்தம் ஒதுக்கப்பட்ட 300,000 ரூபாய் 500,000ரூபாயாக அதிகரிக்கப்படுவதோடு, 3,000 கூடுதல் மாணவர்கள் புலமைப்பரில்களைப் பெற்றுக்கொள்வர்,
04:55 PM கிராமிய மட்டத்தில் 100 விளையாட்டு மைதானங்களை அபிவித்தி செய்ய 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:53 PM சுதேச மருத்துவத்துக்கான ஒரு பட்டப்படிப்பு நிறுவனம் நிறுவப்படும்.
04:52 PM வயம்ப, சப்ரகமுவ மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகங்களில் மருத்துவக் கல்வியை அபிவிருத்தி செய்வதற்க, 1.25 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:51 PM ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்தை அதிகரிக்க ரூ 750 மில்லியன் ஒதுக்கீடு.
04:51 PM மரபியல், ரோபோட்டிக்ஸ் மற்றும் நனோ தொழில்நுட்பங்கள், பாடத்திட்டங்களில் உள்ளடக்கப்படும்.
04:50 PM யாழ். வளாகத்துடன் இணைந்த வவுனியா வளாகத்துக்கு, புதிய நூலகம்
04:49 PM விலைமதிப்பற்ற கற்களை வெட்டுதல், மெருகேற்றி ஏற்றுமதி செய்வதற்கு இலங்கைக்கு கொண்டுவரப்படும் போது, தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரி விதிக்கப்பட மாட்டாது.
04:46 PM தேசிய கல்வி நிறுவனங்கள் மறுசீரமைப்பு.
04:43 PM ஜேர்மன் மற்றும் சுவிட்ஸர்லாந்தின் உதவியுடன், புதிய ஐந்து தொழிற்பயிற்சி நிலையங்கள் நிர்மாணிக்கப்படும்.
04:43 PM கழிவு முகாமைத்துவத்தை நிர்வகிக்க, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உடனடியாக அமைக்கப்படும்.
04:41 PM முதன்மை மற்றும் இரண்டாம் நிலை கல்விகளில் முதலீடுகள்.
04:38 PM பிட்டிபனையில், உயர் தொழில்நுட்ப பூங்கா.
04:36 PM முச்சக்கரவண்டி அதிகாரசபை ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அது, போக்குவரத்து அமைச்சின் கீழ் கொண்டுவரப்படும்.
04:35 PM வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் வைத்திருப்போரிடமிருந்து, அனைத்து விமானநிலைங்கள் மற்றும் துறைமுகங்களில், அறவிடப்படும் வரியை மீள்பெறும் திட்டம் 2018 மே மாதம் 1ஆம் திகதி முதல், செயற்படுத்தப்படும்.
04:33 PM ஐந்து வருடங்களுக்கு குறைந்த வாகனங்களுக்கு புதிய காபன் வரி
04:32 PM வாகன நெரிசலற்ற வீதிகளில் ஓடும் இலத்திரனியல் வாகனங்களுக்கு வரிக் குறைப்பு.
04:31 PM மதுர ஓயா மற்றும் கல் ஓயா ஆகிய பூங்காக்களை உயர் ரக சவாரி இடங்களாக மாற்றுவதற்க, 75 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.
04:29 PM கோட்டை, நானு-ஓயா மற்றும் எல்ல ஆகிய புகையிரத நிலையங்கள், தொல்பொருள் இடங்களாக பிரகடனம்.
04:28 PM சுற்றுலாத் துறைக்கு தேவையான சில குறிப்பிட்ட உணவுகள் மற்றும் பானங்கள் மீது சுமத்தப்படும் கட்டணத் தீர்வுகள் அகற்றப்படும்
04:27 PM அனைத்து சுற்றுலாத்துறை சேவை வழங்குநர்களையும் இலங்கை சுற்றுலாத்துறை சபையின் கீழ் பதிவு செய்யுமாறு வலியுறுத்தல்,
04:26 PM 2025ஆம் ஆண்டளவில், சுற்றுலாத்துறையின் வளர்ச்சி 3 மடங்களால் அதிகரிக்கும்.
04:26 PM சிலாபம், மிரிஸ்ஸ, காரைநகர், பூரனாவெல்ல மீன்பிடித்துறைமுகங்களை புனரமைப்பதற்கு, 1750 மில்லியன் ரூபாய்.
04:25 PM அன்னாசி, வாழைப்பழத்தின் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக, கன்றுகளை உற்பத்தி செய்வதற்கு, விசேட ஆராய்ச்சி நிலையம்.
04:22 PM சிறுதோட்ட தேயிலை உரிமையாளர்களுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு, 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
04:21 PM மசாலா பொருட்களின் தரநிலைகளை உறுதிப்படுத்துவதற்கு, கடுமையான சட்டங்கள் செயற்படுத்தப்படும்.
04:18 PM தரநிலை நிறுவனங்களை அபிவிருத்தி செய்தல்.
04:14 PM ஏற்றுமதி சந்தை அணுகல் திட்டத்துக்கு, 800 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:11 PM காலநிலை அவதான நிலையத்தை நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தரவுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளப்படும்
04:11 PM தகவல் தொழில்நுட்பத்துறை அபிவிருத்திக்கு, 3000 மில்லியன் ரூபாய்.
04:09 PM விசேட தேவையுடைய நபர்களால் முன்னெடுக்கப்படும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக வரி நிவாரணம்.
04:08 PM இன்னும் ஐந்து வருடங்களில், இலங்கையில் தொழில்நுட்ப பல்கலைக்கழகமொன்றை நிர்மாணிப்பதற்கு 3 பில்லியன் ஒதுக்கீடு.
04:07 PM சுயதொழில் புரிவோருக்கான கடன் திட்டத்துக்கு, 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:06 PM சுயதொழில் முயற்சியில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு 10 சதவீத நிவாரணம்
04:05 PM இறக்குமதி, ஏற்றுமதி அபிவிருத்தி வங்கி நிர்மாணிப்பதற்கு 10,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:04 PM மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்மாதிரியான, நீர்வாழ் உயிரியல் பூங்காவுக்கான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும்.
04:00 PM பயிர் காப்பீட்டுத்திட்டத்துக்கு, 3 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
03:59 PM ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக, 55 அடி நீளமான இழுவைப்படகுகளின் செலவு வீதத்தில், 50 சதவீதமானததை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்.
03:57 PM கடலட்டை வளர்ப்புக்காக, கிளிநொச்சி பூநகரியில் விசேட திட்டம் முன்னெடுக்கப்படும்.
03:56 PM கிளிநொச்சி, பொலன்னறுவை மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில், விவசாயத்தை மேம்படுத்துவதற்காக, களஞ்சியசாலைகள் நிர்மாணிக்கப்படும்.
03:55 PM வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில், மழை நீர் சேமிப்புக்காக, மத்திய மற்றும் நடுத்தர குளங்களைப் புனரமைப்பதற்கு, 1,000 மில்லியன் ரூபாய்
03:54 PM சிறிய மற்றும் நடுத்தர குளங்களை புனரமைப்பதற்கு, 1000 மில்லியன் ரூபாய்.
03:50 PM கல்கிசையிலிருந்து இரத்மலானை வரையிலான கரையோர பாதுகாப்புத் திட்டத்துக்கு, 400 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
03:50 PM 10 களப்புகளை புனரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு.
03:47 PM பின்னவளை மிருககாட்சிசாலை புனரமைக்கப்படும்.
03:46 PM இலங்கையின் ஒவ்வொரு நிர்வாகப் பகுதிகளிலும், பசுமை இலங்கை திட்டத்துக்குக் கீழ், ஓடு பாதைகள், நூலகம், தியான மையங்கள் போன்றவை அமைக்கப்படும்.
03:43 PM வௌ்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கு, தற்காலிக தீர்வாக பாதுகாப்பு கட்டடங்கள் நிர்மாணிக்கப்படும்.
03:41 PM தற்போது பயன்படுத்தப்படும் முச்சக்கரவண்டிகளை, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும்
03:41 PM நாடளாவிய ரீதியில், மின்சார சார்ஜ்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும்.
03:40 PM காற்றுப்பைகள் இல்லாத வாகனங்களுக்குத் தடை விதிக்கப்படும்.
03:39 PM தற்போதுள்ள முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு, அவர்களுடைய முச்சக்கரவண்டிகளை, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு காலஅவகாசம் வழங்கப்படும.
03:38 PM 2,500 சிசி திறனுக்கும் அதிகமான சொகுசு வாகனங்களுக்கு சொகுசு வரிகள் அறவிடப்படும்.
03:38 PM இலங்கை போக்குவரத்து சபைக்கு, 50 மின்சார பஸ்களை கொள்வனவு செய்ய 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
03:37 PM – மின்னியல் முச்சக்கர வண்டிகளை கொள்வனவு செய்வதற்கு ஊக்குவிக்கும் பொருட்டு, டீசல் முச்சக்கரவண்டிகளுக்கான இறக்குமுதி வரிகள், 50,000 ரூபாயால் அதிக்கப்படும்.
03:37 PM – ஆடம்பர கார்கள் மீது ஒரு சிறப்பு வரி விதிக்கப்படும்
03:36 PM – இயந்திரத் திறனைப்பொருத்து, வாகன இறக்குமதிகளுக்கான வரிகள், மீள்திருத்தம் செய்யப்படும்.
03:36 PM – மின்சார கார்களின் இறக்குமதி வரி குறைந்தபட்சம், ஒரு மில்லியன் ரூபாய் குறைக்கப்படும்
03:35 PM – இலத்திரனியல் முச்சக்கரவண்டிகள், பஸ்கள் மற்றும் மற்றைய வாகனங்களுக்கு, இறக்குமதி வரிகள் தளர்த்தப்படும்.
03:34 PM – 2040 ஆம் ஆண்டளவில், பெற்றோலியம் அல்லாத சக்திகளில் இயங்கும் வாகனங்களாக மாற்றப்படும்
03:33 PM – 2018ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தில், அரசாங்கம், கடல்வளங்களைப் பயன்படுத்தும்.
03:32 PM – கடைகள் மற்றும் அலுவலகங்கள் சட்டங்கள் திருத்தப்பட்ட வேண்டும்
03:30 PM – 2018 ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்டம் ‘எண்டர்பிரைஸ் பட்ஜெட்’ என்று நிதியமைச்சர் பெயரிட்டுள்ளார்.
03:29 PM – 2018ஆம் ஆண்டில், பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்தால் அதிக்கப்படும்.
03:28 PM – 2018ஆம் ஆண்டு பாதீட்டை, தொழிற்றுறையை ஊக்குவிக்கும் வரவு-செலவுத்திட்டம் என்று, பெயரிட்டார்.
03:27 PM – 2025 ஆம் ஆண்டில், ஒரு மத்திய வருமானம் கொண்ட நாடாகவேண்டும். அதற்காக, விரைவான வருமானத்தை கைப்பற்றவேண்டும்.
03:24 PM – 2017 ஆம் ஆண்டில், இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் சேதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதமாகும்.
03:22 PM – வரவு- செலவுத் திட்ட பற்றாக்குறையானது 2020 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதம் குறைவடையும் என எதிர்பார்க்கின்றோம்.
03:19 PM – அரசாங்கம் என்ற ரீதியில், பொருளாதரத்தில் தீர்க்கமான மாற்றங்களைக்கொண்டுவருவதற்கு எம்மால் முடிந்தது.
03:17 PM – முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டினார்.
03:15 PM – யுத்தத்துக்கு பின்னர்,தமிழர்களின் மனதை வென்றெடுத்து, பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்கலாம். எனினும், அந்த ஆட்சியாளர் தங்களுடைய குடும்பத்தை கட்சியெழுப்புவதில் கரிசை கொண்டிருந்தார். என்று கூறிய அமைச்சர் மங்கள சமரவீர, இவ்வளவுதான் வரலாறு என்றார்.
03:13 PM – 2018 ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்டம், நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு-செலவுத்திட்டமாகும்
03:12 PM – இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசின் 72 ஆவது, வரவு-செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுகொண்டிருக்கின்றது.
03:10 PM – தேசிய வரவு-செலவுத்திட்டத்தை சமர்ப்பிப்பதில் பெருமையடைகின்றேன்: அமைச்சர் மங்கள
03:06 PM – நிதியமைச்சர் மங்கள சமரவீர, அவைக்குள் பிரவேசித்தார் ஆளும் தரப்பினர் மேசைகளில் தட்டி வரவேற்றனர்.
03:03 PM – நிதியமைச்சர் மங்கள சமரவீர, நாடாளுமன்றத்தை வந்தடைந்தார்.
03:02 PM – சபாநாயகர் கரு ஜயசூரிய சபையை வந்தடைந்தார்
03:01 PM – நாடாளுமன்ற உறுப்பினர்களை அவைக்குள் அழைக்கும் ‘கோரம்’ ஒலித்துகொண்டிக்கிறது.