சிறுவர் சுகாதாரம் தொடர்பான சர்வதேச விசேட வைத்தியர்கள் மாநாட்டின் ஆரம்ப வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று(12) இடம்பெற்றது.
இலங்கை சிறுவர் நோய் தொடர்பான வைத்திய ஆய்வு மன்றம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு எதிர்வரும் 15ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இலங்கை சிறுவர் நோய் விசேட வைத்தியர்கள் சம்மேளனத்தின் வருடாந்த மாநாட்டிற்கு அமைவாக இம்மாநாடு நடைபெறுகிறது. சிறுவர் நோய் தொடர்பில் சர்வதேச மட்டத்திலான அறிவைப் பகிர்ந்து கொள்ளுதல், பரிசோதனை முடிவுகளை வெளிப்படு;த்துதல், தரக்கட்டுப்பாட்டை அடையாளம் காணுதல் என்பன இந்த மாநாட்டின் எதிர்பார்ப்புக்களாகும்.
42 நாடுகளைச் சேர்ந்த 250ற்கும் அதிகமான சிறுவர் விசேட வைத்திய நிபுணர்கள் இதில் பங்குகொள்கின்றனர்.